பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று மாலை (26) பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
65,46,44 வயதுடைய தொளும்புவத்தை பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளனர்.
மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களையும் மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் விஷேட அதிரடிப் படையினரால் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பசறை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்ணவின் தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










