பசறை கல்வி வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஆர். எம். நவாஸ் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் இணைந்து புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை அன்புடன் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வமதப் பிரார்த்தனைகளின் பின்னர், கடமைப் பொறுப்பேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்தப் பொறுப்பேற்பு நிகழ்வை முன்னிட்டு, கல்வி வட்டாரங்களினதும் சக பணியாளர்களினதும் சார்பில் அவருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
— நடராஜா மலர்வேந்தன்










