மஹர சிறைச்சாலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளுள் 48 கைதிகளுக்கு இன்று ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் 26 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ராகமை வைத்தியசாலையின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, காயமடைந்த கைதிகளில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.