மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிகிச்சைபெற்றுவரும் கைதிகளில் 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை கலவரத்தால் இதுவரை 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.