மலையக மக்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கப்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது ரணில் விக்கிரமசிங்க இம்முறை பதுளை மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது கடமையை நிறைவேற்றி தோட்டத் தொழிலாளர்களின் 100 வீதம் வாக்குகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டார் .