ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்கள் எனக் கருதப்படும் நால்வரின் கடைசி பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கடைசி பிரசாரக் கூட்டம் மருதானையிலும், சஜித் பிரேமதாசவின் கூட்டம் மருதானை டவர் பகுதியிலும் இடம்பெறவுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் கடைசி பிரசாரக் கூட்டம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுகேகொடையிலும், நாமல் ராஜபக்சவின் கூட்டம் கெஸ்பெவ பகுதியிலும் நடைபெறவுள்ளன.
