இருவேறு பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் தோட்ட கிலன்டில் பிரிவில் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவரும், வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும் சாமிமலை பகுதியில் உள்ள ஓல்ட் டன் தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த வேளை பெண் தொழிலாளி இருவர் உட்பட மூவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்