8 மலையக எம்.பிக்களும் இம்முறையும் போட்டி

 

🛑 மனோ,திகா, ராதா சஜித் கூட்டணியில் களத்தில்

🛑 ஜீவன், ரமேஷ் சேவல்
சின்னத்தில் தனிவழி

🛑 வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் பொது சின்னத்தில் போட்டி

🛑 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் களமிறங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

🛑 நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.

🛑 மனோ கணேசன் கொழும்பிலும், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் நுவரெலியாவிலும் களமிறங்கவுள்ளனர்.

🛑 பொதுத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.இது தொடர்பில் நாளை இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.

🛑 ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

🛑 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதொகா சேவல் சின்னத்தில் களமிறங்கி வெற்றிபெற்றது. அதன்பின்னர் இம்முறையே பொதுத்தேர்தலொன்றில் சேவல் சின்னம் வருகின்றது.

🛑 ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த வேலுகுமார், கண்டி மாவட்டத்தில் ஐதேக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகின்றார்.

🛑 அரவிந்தகுமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இக்கூட்டணியின்கீழ்தான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களின் உறுதியான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

🛑 ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் களமிறங்கும் கூட்டணி, சின்னம் தொடர்பான விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

🛑 கொழும்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைந்துள்ளது. அதேபோல தமிழரசுக் கட்சியும் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தொடர்பில் பரிசீலித்துவருகின்றது. மனோ கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த குருசாமியும் கொழும்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில் முற்போக்கு கூட்டணிக்கு கடும் சவால் உள்ளது. இதொகாவும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளது.

🛑 களுத்துறையில் எம்.பிக்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரித்துள்ளது. அங்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு முற்போக்கு கூட்டணியும், இதொகாவும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபடும்.

🛑 கண்டி மாவட்டத்தில் முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஒருவரை நிறுத்தக்கூடும் அல்லது சஜித் அணியில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கக்கூடும். இதனால் கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பதிலும் இம்முறை கடும் போட்டி நிலவக்கூடும்.

🛑 இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெல்வதற்குரிய வாய்ப்பு இருந்தும், தமிழ்க் கட்சிகளின் தனிவழி பயணத்தால் அது தொடர்ச்சியாக கை நழுவி வருகின்றது. இம்முறை?

ஆர்.சனத்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles