ஹப்புத்தளை, பிற்றத்மலை பகுதியில் இன்று (01) குளவி கொட்டியதில் ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற்றத்மலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 30 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இன்று 10.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்களை சிகிச்சைக்காக ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர், பெண் ஒருவர்
மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹப்புத்தளை வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப சேபால ரத்நாயக்க இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா