இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளையும், மலையக தமிழ்க் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.