சுமந்திரனுடனான ஊடகச் சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய சிறீதரன்

வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பைப் புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

அந்த ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமர்ந்து கொண்டு குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனையும் அழைத்தார். ஆனால், அவர் வரவில்லை.

இதன்போது, கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் சிறீதரனை  அழைத்திருந்தார். அவர் ஊடக சந்திப்பில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததையடுத்து, கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் ரஞ்சினி ஆகியோர் சிறீதரனைக் கையால் பிடித்து இழுத்து அமருமாறு கோரிய போதும் அவர் அதை ஏற்காது அஙகிருந்து வெளியேறிச் சென்றார்.

இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரன், “சரி விடுங்கோ…”  எனக் கூறிவிட்டு பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தொகுதியில் சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles