பிரிக்ஸ் கூட்டணியில் இணைகிறது இலங்கை!

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு இலங்கையும் முயற்சித்துவருகின்றது.

பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய கோரிக்கையை இலங்கை முன்வைக்கவுள்ளது.

இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியவை வருமாறு,

“ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் 9 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இம்மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார். எனினும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கும்.

இதன்போது பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவத்தை பெறுவதற்குரிய விண்ணப்பத்தை இலங்கை முன்வைக்கும். இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஆதரவைக் கோரினோம். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடமும் இந்த கோரிக்கை விடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles