ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு யாழில் இன்று வேட்புமனுத் தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த குழுவால் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்தச் சுயேச்சைக்  குழுவுக்கான வேட்பாளர்கள் வேட்புமனுவில் நேற்று வியாழக்கிழமை மாலை கையொப்பமிட்டனர்.

இதில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஷ் உள்ளிட்ட 9 பேர் கையொப்பமிட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர் என்று அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles