‘ ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், தேர்தலில் வென்று காட்டுங்கள்.” – இவ்வாறு உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.
அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையை நாம் ஏற்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காகவே, ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர போன்றவர்களை குறிவைத்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார் அமைச்சர் விஜித ஹேரத்.