டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தனி அமைச்சு

டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு டிஜிட்டல் அமைச்சொன்று ஸ்தாபிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டிலுள்ள சர்வதேச நிபுணர் ஒருவர் நாட்டுக்கு வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி விளக்க முடியுமா என எழுப்பட்ட  கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

‘ ஆம். அவ்வாறானதொரு திட்டம் அரசாங்கத்துக்கு உள்ளது. டிஜிட்டலுக்கென தனி அமைச்சு உருவாக்கப்படும். துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய அவர்கள் தலைமையில் நடவடிக்கை இடம்பெறும். உத்தியோகப்பூர்வ பணி முடிவடைந்ததும் அது பற்றி உரிய அறிவிப்பு விடுக்கப்படும். உரியவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles