கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர்மாய்க்க முயற்சி!

யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். பருத்தித்துறையில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அன்றைய தினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles