அநுர ஆட்சியில் அமைச்சு பதவியேற்க தமிழரசுக் கட்சி பச்சைக்கொடி

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலத்தில் அமைச்சுப் பதவிகள் சம்பந்தமாகப் பல விதமான கேள்விகள் எங்களிடத்தே கேட்கப்படுகின்றன. குறிப்பாக நான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியாகத்தான் இருந்தது.

முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின.

ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது.

ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்றபோது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில்தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.

எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. அதனால் எங்களுக்குரிய அரசியல் தீர்வும் காண முடியாத நிலைமை.

ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் இராஜிநாமா செய்து வெளியே வந்தார்.

அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் டையவே கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது.

ஏனெனில் காலங்கள் மாறும். நிலைமைகள் மாறும். ஆகையினால் அதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தால் அதனையும் நாங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு ஆகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles