பழிவாங்கல் வேட்டை ஆரம்பம்: பதறுகிறார் நாமல்

எமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு இருப்பதால் எமக்கு பயம் இல்லை.” – என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“சிஸ்டர் சேன்ஸ் என பேசப்பட்டாலும், அரசியல் பழிவாங்கலே இடம்பெறுவதைபோல் தெரிகின்றது. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் அதுவே நடந்துள்ளது.

இந்நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் எவரும் கையடிக்க முடியாது. நீதித்துறை சுயாதீனமாக இருக்கின்றது என நம்புகின்றோம். அதனால் அரசியல் பழிவாங்கல் வேட்டைக்கு நாம் அஞ்சவில்லை. விசாரணைகளை எதிர்கொள்ளவும் புலம்பவில்லை.

அதேவேளை பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்க்கமான சக்தியாக உருவாகும். தேர்தலை நோக்கி கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதாலேயே நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஜனாதிபதி தேர்தலைவிடவும் பொதுத்தேர்தலில் நிலைமைமாறும். எமக்கான ஆதரவு நிச்சயம் அதிகரிக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles