கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல்வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.










