மஹிந்தவே சிறந்த தலைவர்!

” மஹிந்த ராஜபக்ச என்பவர் அனைவருக்கும் முன்மாதிரியான தலைவர்.” – என்று ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த அணியை கைவிட்டு ரணில் பக்கம் தாவிய முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரோஹித கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்ச எமக்கு தந்தைபோல் பலமாக இருப்பவர். களுத்துறை மாவட்ட மக்கள் என்னை மறக்கவில்லை. அதனால்தான் பொதுத்தேர்தலில் வெற்றிபெறவைத்தனர்.  ரோஹித்வை தோற்கடிக்க முடியாது என மஹிந்த ராஜபக்சவும் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச அனைவருக்கும் முன்மாதிரியான தலைவர். எனவே, நாம் எதிரணியில் இருந்து எமக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவோம்.” – என்றார்.

பொதுத்தேர்தலில் ரோஹித அபேகுணவர்தன, களுத்துறை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

Related Articles

Latest Articles