சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவானது யூதர்களுக்கு எதிரான செயல் என்று இஸ்ரேல் பிரதமர் சாடியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே, இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தீர்ப்பை ஏற்கப்போவதில்லை எனவும், காசாவில் போர்க்குற்றம் நடக்கவில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.