கூரையை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து நகையை கொள்ளையடித்த இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி , உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , திருடிய நகைகளை இளைஞனிடம் இருந்து மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles