நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை

“நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் எதுவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ இந்தியாவுடன் இணைப்புகளை உருவாக்குவது தொடர்பில் எதிரணியில் இருக்கும்போது மாறுபட்ட கருத்துகளை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்ட சகல ஒப்பந்தங்களுக்கும் தற்போதைய அரசாங்கமும் உடன்பட்டுள்ளது. எட்கா ஒப்பந்தம் பற்றி அரசின் நிலைப்பாடு என்ன?

எமது நாட்டு சக்தியை (Energy) இந்தியாவுடன் இணைப்பது, இந்திய ரூபா பயன்பாட்டை அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களுக்கு ரணிலுக்கு ஆணை வழங்கியது யாரென இதற்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பி இருந்தார். எனவே, ரணிலின் நிகழ்ச்சி நிரலை இந்தியாவுடன் செயல்படுத்துவதற்கு தற்போதைய அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதா” என நளின் பண்டார எம்.பி. வினவி இருந்தார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

“  அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. ரணிலுக்கு ஆணை கிடைக்கவில்லை. இலங்கையில் நாம் சக்தி ( (Energy) யை உற்பத்தி செய்வோம். மேலதிகமாக இருப்பவற்றை பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையில் பிம்ஸ்டெக் வலய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என நாம் தெளிவாக கூறியுள்ளோம். இது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயம். வருமானமும் கிட்டும்.

இந்தியாவுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் கூட்டறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் (நளின் பண்டார) கூறுவதுபோல் நடக்கவில்லை. குறிப்பாக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.” -என்றார்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles