கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பளை நிதாஸ் மாவத்த பகுதியில் லொறியொன்று மின் கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளானது.
பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள கொங்ரீட் மின் கம்பத்துடனேயே மோதியுள்ளது.
இதனால் மின்சார தூண் இரண்டாக உடைந்து, லொறிமீது விழுந்துள்ளது. வியாபார நிலையமொன்றும் சேதமடைந்துள்ளது.
அப்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த நபரொருவர் விபத்தில் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
