சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தன, பாராளுமன்ற உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான சாந்த பத்மகுமார,சுனில் ராஜபக்ஷ ஆகியோரால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்