இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

இந்தியாவின் முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார்.

இந்தியா​வின் 14 ஆவது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங், 1932 செப்டம்பர் 26 ஆம் திகதி மேற்கு பஞ்சாபில் பிறந்​தவர்.

காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவரான இவர், 1991 முதல் 96 ஆண்டுவரையான காலப்பகுதியில் நரசிம்​ம​ராவ் தலைமையிலான அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​சராக பதவி வகித்​தார்.

பொருளாதார வல்லுநரான இவர் இந்தியா​வின் பொருளாதார தாராளமய​மாக்கல் கொள்​கை​யின் தொடக்​கத்​துக்கு வித்திட்டவர். மத்திய வங்கி​யின் ஆளுநராகவும் பதவி வகித்​துள்ளார்.

காங்​கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்​போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்​தார்.

மன்மோகன் சிங்​குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலை​யில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்பட்​டது. நினை​விழந்து மயக்​க​மும் ஏற்பட்​டுள்​ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார

இந்நிலை​யில், மருத்துவ குழு​வினர் தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மன்மோகன் சிங். பஞ்சாப், டெல்லி பல்கலைக்கழகங்களில் பணியாற்றி உள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.

மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல் 1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார்.

1990-91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் பணி யாற்றினார். மன்மோகன் சிங்குக்கு குர்சரண் கவுர் என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனர்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்​சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா,காங்​கிரஸ் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக ​முதல்​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு ​மாநில ​முதல்​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles