பாலத்துக்கு அடியிலிருந்து இரு சடலங்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு!

கிளிநொச்சியில் பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி ஏ – 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டைப் பாலத்துக்கு அடியில் இருந்து ஒன்றாக இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பாலத்தின்  புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டுக் காணப்படும் நிலையில், அங்கு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்று  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் இருந்து தலைக்கவசம் இரண்டும், பயணப் பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்கள் விபத்தால் உயிரிழந்தவர்களது சடலங்களா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலங்கள் நீதிவானின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காகக்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles