ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐதேக பொதுச்செயலாளராக செயற்பட்ட பாலித ரங்கே பண்டார, அப்பதவியில் இருந்து விலகினார்.










