ஜனாதிபதி அநுர 13 ஆம் திகதி சீனா பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரவின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் டில்லிக்கு பயணம் மேற்கொண்டு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி இருந்த நிலையிலேயே ஜனாதிபதி அநுரவின் பீஜிங் பயணமும் இடம்பெறுகின்றது.

குறித்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பேச்சு நடத்தவுள்ளார். இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

வேளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளார்.

Related Articles

Latest Articles