உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உலக நாடுகள் யுத்தத்தை தவிர்த்து, புத்தரின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உலகத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட உள்ளோம். பொதுமறையான திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும்.
முதல்கட்டமாக சிங்கப்பூரில் திருவள்ளூவர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் தமிழ் மொழியின் பெருமை மற்றும் தமிழ் கலாச்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.