அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன் 20 ஆம் திகதி நண்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவார்.
அதற்கு முன்பாக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு பிரிவுபசார உரையாற்றவுள்ளார்.
இதன்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.