டொனால்ட் டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவருகின்றார்.
இந்த நிலையில் கனடா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை அமெரிக்க மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
‘ அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என ட்ரம்ப் கூறுகின்றார். இது நடக்கப்போவதில்லை.”- எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் இருந்து வரும் மின்சாரம் அல்லது எண்ணெய்க்கு 25 சதவீதம் கூடுதல் வரி என்பதை எந்த அமெரிக்கரும் விரும்பமாட்டார்கள். இது தொடர்பாக அமெரிக்க மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.