அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி திருமலையிலும் கையெழுத்து வேட்டை!

பலவருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று நடைபெற்றது.

குறித்த கையெழுத்து வேட்டையானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதுடன் குறித்த கையெழுத்து போராட்டமானது வடகிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

கையெழுத்துகள் திரட்டப்பட்ட பின்னர், அவை அடங்கிய மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles