இம்ரான் காணுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்ப்பின் பிரகாரம் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை ஆல்-கதிர் என்ற பெயரில் அவர்கள் இணைந்து நிறுவிய அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு பல நூறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு தேசிய பொறுப்புடைமை பணியகம் கடந்த 2023 இல் முன்வைத்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 3 முறைகள் தீர்ப்பு திகதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் ஜாவேத் தீர்ப்பளித்துள்ளார்.

Related Articles

Latest Articles