போதை மாத்திரைகளுடன் பசறையில் ஒருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் பசறையில் ஒருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை 10 ம் கட்டை பகுதியில் போதை மாத்திரைகளை தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி இ.எம்.பியரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழுவினர் உடன் குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 380 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் ஐ.பி. அமரசேன ,சாஜன் செனவிரத்ன 54251, சாஜன் சமில் 68558, பொலிஸ் கான்ஸ்டபிள் கபுகொடுவ 82 971 ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles