நீதிமன்றத்துக்குகூட பாதுகாப்பாக செல்ல முடியாதெனில் நாட்டின் நிலை?

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

இதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ,அது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

‘ நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.நாளாந்தம் மனித படுகொலைகள் இடம்பெறுகின்றன. சிறிய குழந்தைகளும் கொல்லப்படுகின்றன.அதனால் சட்டம் ஒழுங்கு தொடர்பில் உறுதியான தீர்மானம் ஒன்று தேவை.

அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நாட்டின் சட்டத்தை மதிக்கின்ற ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்.

புதுக்கடை நிதிமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது என்றால் நாட்டின் நிலை என்ன? யாராவது மரண அச்சுறுத்தலுடன்தான் நீதிமன்றத்துக்கும் செல்வதாக இருந்தால் அது பாரிய பிரச்சினை.இந்த நிலை சமூகத்தில் வேறு இடங்களிலும் இடம்பெறுமாக இருந்தால் அது பாரிய பிரச்சினையாகும்.

அதனால் அரசாங்கம் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பலமான திர்மானங்களை எடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் கொலை கொள்ளை மோசடி இடம்பெற முடியாது.

அதனால் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் பலமான தீர்மானங்களுக்கு எங்களால் வழங்க முடியமான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

இந்த காலப்பகுதியில் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெற்றிருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டி இருந்தோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை என்றே வெளிப்படையில் தெரிகிறது.

எனவே இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles