” வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் தனக்கு துளியளவும் இல்லை.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,
‘எதிர்வரும் மாகாண சபைத் தேர்த லில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகிறீர்களா?’ – என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
“மாகாண சபைத் தேர்தலை நடத்து வதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வலுத்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.
இவ்வாறான இழுபறியில் மாகாண சபைத் தேர்தல் நடந்தால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு நான் தயாரில்லை.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.
நாங்கள் செய்வது ஒரு தேச விடுதலைக் கான அரசியல்தான் என்பது எல்லோருக் குமே தெரியும். இது பதவிகளுக்குப் பேரம் பேசுகின்ற காலம் இல்லை. ஆகவே, பதவிகளை முக்கியத்துவப்படுத்தி அரசியல் செய் வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கு என்ன பதவி கொடுக்கலாம், இவர் என்ன பதவிக்கு வரலாம் என்ற இந்த நிலைமை மாற்றப் படவேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.










