பட்டலந்த வதை முகாம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தலைமையிலான குழுவினாரால் மேற்படி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விரைவில் விசாரணை நடத்தி சட்டத்தை செயல்படுத்துமாறுகோரி ஜனாதிபதி செயலகத்திலும் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
‘ பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.” என்று மேற்படி அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்தார்.