ஐமச தலைவராக சஜித் மீண்டும் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போதே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சஜித் பிரேமதாசவின் விசேட வேண்டுகோளின் பிரகாரம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும், பொருளாலராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும், செயற்பாட்டு பிரதானியாக நளின் பண்டாரவும் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டுக்கான புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

Related Articles

Latest Articles