2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.
இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் நாட்டின் சனத்தொகை 14 இலட்சத்து 3 ஆயிரத்து 731 ஆல் அதிகரித்துள்ளது.
15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது.
நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் வசிக்கின்றனர். கம்பஹா மாவட்ட சனத்தொகை எண்ணிக்கை 24 லட்சத்து 33 ஆயிரத்து 685 ஆகும்.
குறைந்தளவான சனத்தொகை வாழும் மாவட்டமாக முல்லைத்தீவு விளங்குகின்றது. அங்கு சனத்தொகை எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 542 ஆகும்.
