சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் இன்று (19)முற்பகல் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்தப் போது பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகப் பைகளை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்திற்காக இலங்கை வங்கியின் பதுளை மேற்பார்வை குழுவின் ஊடாக பெற்றுக் கொண்ட அரசாங்கப் பணமான ரூபாய் 10 இலட்சத்தை சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக வஞ்சகமான முறையில் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை துரோகமிழைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து குற்றத் தடுப்புத் திணைக்களம் பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் சட்டத்தின் கீழ் பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 76406 இலக்கமுடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களையும் கவனத்தில் எடுத்த நீதவானால் இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles