தமிழரசுக் கட்சியை ஆதரிக்கமாட்டோம் – தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை உட்படnசில சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என்று வெளியான செய்திகள் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“தேர்தல் காலத்திலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பியவர்கள் தேர்தலுக்குப் பின்னரான ஆட்சியமைப்புக்கு இடைப்பட்ட இக்காலத்திலும் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி வருகின்றார்கள்.

எமது மக்களை வதந்திகள் மூலமாக வழிநடத்தி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கருதும் எந்தவொரு சுயநல அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேரவோ – இணைந்து பயணிக்கவோ தேசிய மக்கள் சக்தியினரான நாம் முன்வரப்போவதில்லை என்பதை எமது மக்களுக்குப் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.

எமது மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எமக்கு வாக்களித்த மக்கள் – வாக்களிக்காத மக்கள் என்ற பேதமின்றி ஒவ்வொருவரும் சமூகம் சார்ந்தும், பிராந்தியம் சார்ந்தும் உயர்வு பெற வலுவான எதிரணியாகச் செயற்படுவோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles