மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘ நாட்டில் 8 மாத காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன நடத்தப்பட்டுள்ளன.
தற்போது மக்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய செயற்பட வேண்டும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இந்த அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான காலம் தீர்மானிக்கப்படும்.
அதற்கு முன்னர் இதனுடன் தொடர்புடைய சட்ட திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










