நுவரெலியா, நானுஓயா, கந்தபளை மற்றும் ராகலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டார்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் நடத்தினார்.
நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கொரோனா தொற்று அச்சம் இருப்பதால் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதேச சபை உறுப்பினர்களான சுஜிகலா, செந்தில், நிரோஷன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் விஷனு, தொழில்சங்க மாநில பிரதிநிதி சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மக்கள் தமது தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயாகுமார் அவர்களிடம் முன்வைத்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கான தீர்வு முன்வைக்கப்படும் என மயில்வாகனம் உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.