வாசகர்களே அவதானம்! மலையக குருவியின் விசேட அறிவித்தல்

 

மலையக குருவி ‘வட்ஸ்அப்” குழுக்களில் உள்ள அங்கத்தவர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பை ஏற்படுத்தி, மலையக குருவியால் பண வவுச்சர் வழங்கப்படுவதாகவும், அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாசகர் ஒருவர் எமது கவனத்துக்கு கொண்டுவந்தார்.

மலையக குருவியால் அவ்வாறு எவ்வித பண வவுச்சரும் வழங்கப்படவில்லை என்பதையும், வட்ஸ்அப் குழுக்களில் உள்ளவர்கள் தொடர்பில் எவ்வித பரிசு தேர்வும் நடத்தப்படவில்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.

அண்மைய நாட்களில் இவ்வாறுதான் நூதன முறையில் – இணையவழி மோசடி இடம்பெற்றுவருகின்றது. எனவே, இவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மிக அவதானமாக இருங்கள்.

பெருந்தொகை பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது, அதனை பெறுவதற்கு சிறு தொகை வைப்பிலிட வேண்டும் எனக்கூறிகூட பண மோசடி இடம்பெறுகின்றது. எனவே, நூதன முறையில் இணையவழி மோசடிகளில் ஈடுபடும் தரப்புகள் குறித்து விழிப்பாகவே இருங்கள்.

அதேவேளை, தொலைபேசிமூலம் வரும் அநாமதேய அழைப்புகளை நம்பி உங்கள் முகவரி, வங்கி கணக்கிலக்கம், அடையாள அட்டை இலக்கம், ஓடிபி இலக்கம் என்பவற்றை எவருக்கும் வழங்கிவிட வேண்டாம்.

நன்றி

Related Articles

Latest Articles