அரசின் பயணம் தவறெனில் மக்கள் பொங்கியெழுவார்கள்!

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம் தவறெனில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.”- என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களே கடந்துள்ளன. எனவே, அரசாங்கத்தின் பயணம் சரியா அல்லது தவறா என்பதை ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னரே அறியக்கூடியதாக – உணரக்கூடியதாக இருக்கும்.
பயணம் சரியெனில் மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். தவறான பயணமெனில் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள்.

நாட்டில் இன்னமும் உரிய மாற்றம் இடம்பெறவில்லை என்றே நானும் கருதுகின்றேன். பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. மக்களுக்கு வாழ்வதற்கு கஷ்டமாக உள்ளது.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் உரிய மதிப்பாய்வின் பின்னரே அது பற்றி கருத்து வெளியிட முடியும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles