அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: நோட்டோவுக்கு புடின் எச்சரிக்கை

பால்டிக் கடலை Baltic Sea ஒட்டியுள்ள தனது பிராந்தியமான கலினின்கிராடை (Kaliningrad) பிற பகுதிகளிலிருந்து துண்டிக்க மேற்குலக கூட்டமைப்பான நேட்டோ முயன்றால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

நேட்டோ அமைப்புக்கு ரஷ்யா அனுப்பிய ஆவணத்தில், நேரடி ஆயுத மோதல் வெடிப்பதற்கான அதிக ஆபத்துகளை உள்ளடக்கிய ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற பாதையை நேட்டோ கூட்டணி பின்பற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், “மோதல் தொடங்கும் போதே, நேட்டோ உறுப்பு நாடுகளின் முக்கிய முடிவெடுக்கும் மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும்” இதில் அடங்கும் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கலினின்கிராட் பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதியிலிருந்து தனிமைப்படுத்தும் நோக்கில் நேட்டோ நாடுகள் ஏதேனும் முயற்சியை மேற்கொண்டால், தனது எல்லைகளைப் பாதுகாக்க, அணுஆயுதங்கள் உட்படத் தன்வசம் உள்ள அனைத்துப் படைகள் மற்றும் திறன்களையும் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கும்” என்று Non-paper என வகைப்படுத்தப்பட்ட அந்தப் பலகலைக்கழைப்பு இராஜதந்திர ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் எச்சரிக்கையைத் தவிர, கடந்த மூன்று நாட்களில் குறைந்தது மூன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகங்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அதில், ராணுவப் பயிற்சிகள் மற்றும் கலினின்கிராட் தொடர்பான திட்டமிடுதல் மூலம் பதற்றத்தை நேட்டோ அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

அதேவேளையில், ஐரோப்பாவிற்குத் தான் அச்சுறுத்தலாக இருப்பதாக மேலைநாடுகள் கூறுவதையும் ரஷ்யா நிராகரித்துள்ளது.

போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையில் அமைந்துள்ள, பலத்த ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய பிராந்தியமான கலினின்கிராட் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் சாத்தியமான மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று அந்த அறிக்கைகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற அணுஆயுதப் பேச்சு: நேட்டோ கண்டனம்

ரஷ்யா இராஜதந்திரக் கடிதத்தை அனுப்பியதை நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் உறுதிப்படுத்தினார், ஆனால் அதன் உள்ளடக்கங்களை அவர் வெளிப்படுத்தவில்லை.

“நேட்டோ ஒரு தற்காப்புக் கூட்டணி என்றும், எங்களது நடவடிக்கைகள் அல்லது பயிற்சிகள் ரஷ்யாவின் எந்தப் பகுதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது என்பதையும் குறிப்பிட்டு நாங்கள் பதிலளித்துள்ளோம்.

பலப் பிரயோக மிரட்டல் மற்றும் பொறுப்பற்ற அணுஆயுதப் பேச்சுகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். உக்ரைனில் தூண்டப்படாத போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷ்யாவைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

Related Articles

Latest Articles