ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
எனினும், விண்வெளித் துறையை நோக்கி ஆஸ்திரேலியா நகர்வதற்குரிய முக்கிய பங்களிப்பாக இம்முயற்சி கருதப்படுகின்றது.
பிரிஸ்பேன் சோதனை தளத்தில் இருந்து வானில் பறந்த ராக்கெட் 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட இந்த எரிஸ் ராக்கெட் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் ஆகும்.
இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.
ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
முதல் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தக்கட்ட முயற்சிக்குரிய நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என தெரியவருகின்றது.