பாதாள குழுக்களுக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு இல்லை

பாதாளக் குழுக்களுக்கு கடந்த காலங்களில் அரசியல் பாதுகாப்பு கிடைக்கப்பெற்றுவந்தது எனவும், தற்போது அந்நிலைமை மாறியுள்ளது எனவும் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர், நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குற்றவாளிகள் சிலர் வெளிநாடுகளுக்குச்சென்று, இங்கு குற்றங்களை வழிநடத்துகின்றனர். தமது சொந்த பெயரில்கூட முன்னிலையாக துப்பில்லாத அந்த தரப்பினருக்கு இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்றுவந்த அரசியல் பாதுகாப்பு தற்போது கிடைப்பதில்லை.

மேற்படி குற்றவாளிகளின் பின்னணியில் அரசியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த பாதுகாப்பு கிடைப்பதில்லை. எனினும், இங்குள்ள போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், முப்படைகளில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அத்துடன், இதற்கு முன்னர் அரசியல் பாதுகாப்பை வழங்கிய தரப்பினரை நேரடியாக – முறைமுகமாக பயன்படுத்திவருகின்றனர். இவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles