ஆஸ்திரேலிய பிரதமர்மீது இஸ்ரேல் பிரதமர் அரசியல் போர் தொடுப்பு!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இஸ்ரேலைக் காட்டிக்கொடுத்துவிட்டார் எனவும், ஆஸ்திரேலிய யூத சமூகத்தை கைவிட்டுள்ளார் எனவும் இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் பலவீனமான அரசியல் வாதியெனவும், அவர் எப்படிபட்டவர் என்பதை வரலாறு நினைவுகூரும் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவால் இஸ்ரேல் கொதிப்படைந்துள்ளது.

அத்துடன், சில இஸ்ரேல் அரசியல்வாதிகளுக்கு ஆஸ்திரேலியா விசா வழங்கவில்லை. இதுவும் இஸ்ரேலை கடுமையாக சீற்றமடைய வைத்துள்ளது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் கடும் இராஜதந்திர மோதல் வெடித்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

Related Articles

Latest Articles